கடந்த 8 மாதங்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் 2024 ஆம் ஆண்டு (நாடாளுமன்றத் தேர்தல்) வரை போராடவும் தயார் என விவசாய அமைப்புகளில் ஒருவரான கோல்டன் தெரிவித்துள்ளார். இவர் கோவை மதுக்கரையை சேர்ந்தவர். தனது தந்தை, தாத்தா ஆகியோர் பஞ்சாபில் விவசாயம் செய்ததால் அங்கு செட்டில் ஆகிவிட்டார்.